கடலலையினுடைய செயற்பாட்டினால் பல்வேறுபட்ட விதமான தின்னல் நிலவுருவம் தோற்றம் பெறுகின்ற அதேவேளை அந்த தின்னல் செயன்முறையினால் கொண்டு வரப்படும் பருப்பொருட்கள் படியவிடப்படும் போது தோற்றம் பெறுகின்ற நிலவுருவங்கள் படிதல் நிலவுருவங்கள் ஆகும். அவையாவன கடற்கரை நீங்கு மணற்தடை, குடாத்தடை , கூழாங்கல் நாக்கு போன்றனவாகும்.
கடற்கரை நீங்கு மணற்தடை- கடற்பிரதேசங்களில் காணப்படுகின்ற மணல், சிறுபரல்கள், சிற்பி, சோகி போன்ற பருப்பொருட்கள் கரையோர பிரதேசங்களில் அலையின் தொழிற்பாடு காரணமாக எடுத்துவரப்பட்டு கொணர்ந்து படியவிடப்படுகின்றபோது அதனை மணற்தடை என்று அழைத்துக்கொள்ளுவார்கள். காலப்போக்கில் அவ்வாறு படியவிடப்பட்ட மணற்தடைகள் அலையினுடைய வேகம் அதிகரிக்கின்றபோது அக்கரையோர பிரதேசங்களில் இருந்து நீக்கப்படுகையில் அதனையே கடற்கரை நீங்கு மணற்தடை என அழைப்பார்கள்.
குடாத்தடை- கரையோர பிரதேசங்களில் மூன்று பக்கங்கள் நிலத்தினாலும், ஒரு பகுதி நீரினாலும் தொடுக்கப்பட்டு காணப்படும் நிலவுருவத்தினை குடா என அழைப்பார்கள். இக்குடாவின் வாய்ப்பகுதியில் கடலலையினால் அரித்துக் கொண்டுவரப்படுகின்ற மணல், சங்கு, சிற்பி, சோகி போன்ற பருப்பொருட்கள் கொண்டுவந்து படியவிடப்படுகின்றபோது அதனையே குடாத்தடை என அழைப்பார்கள்.
கூழாங்கல் நாக்கு- அலைகளின் தொழிற்பாட்டினால் கொண்டு வரப்படுகின்ற மணல், மணற்கல், போன்றன கரையோர பிராந்தியங்களில் இருந்து கடலை நோக்கி நாக்கு வடிவம் போன்ற அமைப்பில் படியவிடப்படுகின்றபோது அதனை கூழாங்கல் நாக்கு என அழைத்துக்கொள்ளுவார்கள்.


No comments:
Post a Comment